வெலிபென்ன - தர்கா நகர் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் குழாய் ஒன்று வெடித்ததில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்தார்.
அத்தோடு , 2 இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு குறித்த கொதிகலன் குழாய் வெடித்துள்ளதுடன், உயிரிழந்த குறித்த இந்திய பிரஜை 34 வயதுடையவர் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.