விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக வந்து ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தவர் மணிமேகலை. அத்தோடு அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அந்த ஷோவில் இருந்து வெளியேறிய மணிமேகலை, அதன் பின் அதே ஷோவுக்கு தொகுப்பாளராக வந்தார். தற்போது கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து மணிமேகலை சொந்தமாக ஒரு பார்ம் ஹவுஸ் கட்டி வருகிறார். அதற்கான பணிகள் நடக்கும் போட்டோவை அடிக்கடி அவர் வெளியிட்டும் வருகிறார்.
இவ்வாறுஇருக்கையில் மணிமேகலை தரையில் வழுக்கி விழுந்துவிட்டாராம். அதனால் காலில் அடிபட்டு தற்போது படுத்த படுக்கையாக அவர் இருந்து வருகிறார்.
அந்த போட்டோவை பார்த்து தற்போது அவரது ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.