ரணிலை தொலைபேசியில் கடும் தொனியில் எச்சரித்த மகிந்த...! வெளியான காரணம்

keerthi
0


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அத்தோடு இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 


எனினும், அரசாங்கம் தொடர்வதற்கு ஆதரவளிக்காவிடில் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தி வருதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அத்தோடு அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானம் தவறானதென பொதுஜன பெரமுன குற்றம் சாட்டிவருகிறது.


மொட்டு கட்சி வகித்து வந்த அமைச்சுப் பதவிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டமை மகிந்தவை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இவ்வாறுஇருக்கையில், மகிந்த ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு கணிசமான நேரம் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



“இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கும் உங்கள் நிலைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கும் மொட்டு கட்சி உங்களுக்கு ஆதரவளிக்கிறது, அதை மறந்துவிடாதீர்கள்” என்றும் மகிந்த ராஜபக்ச கடும் தொனியில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top