சிலாபம் நகரிலுள்ள சிறப்பங்காடி ஒன்றினுள் தேரர் ஒருவர் தாக்கப்பட்டு, அவரிடமிருந்து 48 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு கைதானவர் சிலாபம் - வுட்லண்ட் பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் நகரிலுள்ள குறித்த சிறப்பங்காடியில் கடந்த 21 ஆம் திகதி தேரர் ஒருவரை தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணப்பையை கொள்ளையிட்டு சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் இதனையடுத்து, சிலாபம் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து சந்தேகநபர் கைதானார்.