சீரற்ற காலநிலை காரணமாக, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் தரையிறக்கப்படவிருந்த இரண்டு விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
மாலைத்தீவில் இருந்து கொழும்புக்கான பயணத்தை முன்னெடுத்திருந்த யு எல் 116 என்ற விமானமும், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு வந்த யு.எல் 365 என்ற விமானமுமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அத்தோடு சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமையினால் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அங்கும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, இந்தியாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு குறித்த விமானங்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர் குறிப்பிட்டார்.