ரயில் திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றாது மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவதன் மூலம் பல நெருக்கடிகள் உருவாகலாம் என அதன் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்..
"ரயில் நிலைய அதிபர் சங்கமாக நாங்கள், எங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளோம். இந்த அனைத்து கலந்துரையாடல்களிலும், ரயில்வே துறையை ஒரு அதிகார சபையாக மாற்றுவதை விட ரயில்வே துறை மறுசீரமைப்பு செய்தால் நல்லது என்று நாங்கள் எப்போதும் கூறியுள்ளோம். திறைசேரி ஊடாக ஊழியர்களுக்கு நிதி ஒதுக்க முடியாது என அமைச்சின் செயலாளர் கூறுகிறார். ரயில்வேயில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.19,382 ஊழியர்கள் உள்ளனர்.இதுதொடர்பான அனைத்து பராமரிப்பு பணிகளையும் வருவாய் மூலம் பெற வேண்டும். ரயில்வே நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாகும். எனவே இதை இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து ஒரு நிபுணர் குழு மூலம் அதிகார சபையாக மாற்ற வேண்டும்" என்றார்.