அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ் பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் அமைப்பினால் கண்டியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.