இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 13 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்தில் 10 ஆயிரத்து 990 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு தென்மாகாணத்தி;ல் 2ஆயிரத்து 119 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
702 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 930 பேர் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை, தியலபே, தென்னபிட்டிஹேன பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக, காலியில் வீடொன்றின் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.