கொழும்பு - சுதந்திரசதுக்க வளாகப் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
எனினும் குறித்த பகுதியில் பயணித்த மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மீது மகிழுந்து மோதுண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த காவல்துறை அதிகாரி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.