அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் புகை பரிசோதனையை மேற்கொள்ள போவதில்லை என பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கான புகைப் பரிசோதனை மேற்கொள்ளாமையை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தரமற்ற எரிபொருள் பாவனையும் இதற்கு முக்கிய காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.