இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ அதிகாரிகள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உட்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 21 ஆவது நாளாக நீடித்து தொடர்ந்து வருகின்ற நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ரஷ்யா சென்றுள்ளமை போரின் ஒரு திருப்பு முனையாக பார்க்கப்படுகின்றது.
ரஷ்யா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஹமாஸ் அமைப்பின் நிர்வாகி அபு ஹமித் போர் நிறுத்த ஒப்பந்தம் எற்படாதவரை பணயக்கைதிகள் விடுதலை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது என கூறப்படுகின்றது.
அத்தோடு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர்.