அயகம இன்னகந்த பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி தரையில் விழுந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அயகம பொலிஸார் நேற்று (29) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு காயமடைந்தவர் பொலிஸாரினால் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அயகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இனகந்த என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக கணவரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.