2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்த வருடம் வரை தேவையான எரிபொருளுக்கான விலைமனு கோரல் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால், நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கும் வாய்ப்பை சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் வருடத்திற்கு சுமார் 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான அந்நியச் செலாவணியை நாட்டில் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு கடந்த காலங்களில் எமது நாடு பாரிய எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது.
எரிபொருள் வரிசைகள் ஏற்பட்டன,அதே போன்று விமானங்களுக்கு அவசியமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆனால் மிகவும் குறுகிய காலத்திலேயே அந்த நிலையில் இருந்து முழுமையாக மீண்டுவர எம்மால் முடிந்தது எனவும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக குறிப்பிட்டுள்ளார்.