ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த கூட்டத் தொடரில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த கூட்டத் தொடரிலேயே இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறுஇருக்கையில் , நல்லாட்சி காலத்தில் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவை அந்தப் பதவிக்கு நியமிக்க கட்சியில் பெரும்பான்மையாக இணக்கம் ஏற்பட்டுள்ளது.
கட்சியை முன்னையது போன்ற பலமான நிலைக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி பல புதிய மாற்றங்களுடன் தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.