2022ம் மற்றும் 2023ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு இணையவழி மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
எவ்வாறாயினும், விண்ணப்பம் கோரலுக்கான திகதி மேலும் நீடிக்கப்படமாட்டாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.