சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (23.10.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தென் மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தெனியாய,அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த பகுதிகளில் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.