தமிழ் மக்களுக்கு மிக மோசமாக இந்த பிக்கு கதைக்கும் போது ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கி கொண்டு இந்த மாவட்டத்திலேயே இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருப்பது மிகவும் மன வேதனை தரும் ஒரு விடயம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி,
எனினும் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நடக்கும் பொய்யான விடயங்களை சித்தரிக்கும் வேலை திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அடாவடி பிக்கு அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடந்த காலத்திலேயே கிழக்கு மாகாணத்தை நாசமாக்கிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் அவர்களுடைய இனவாத கும்பல் கிழக்கு மாகாணத்தையும் அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை அதிலும் குறிப்பாக என்னையும் குறிவைத்து ஒரு சில போலியான பிரச்சாரங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகின்றார்கள்.
இதனுடைய நோக்கம் தெற்கிலே எங்களுடைய உரைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் சிங்கள சமூகம் மத்தியில் என்னை தவறான ஒருவராக சிங்கள மக்களுக்கு எதிரான ஒருவராக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சிங்களவர்களை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்கின்ற சிந்தனையுடன் உள்ள ஒருவராக எடுத்துக்காட்டுவதற்கு தான் இந்த முயற்சி.
அத்தோடு மாவட்டத்தில் இன்றோடு தொடர்ச்சியாக பண்னையாளர்களின் ஆர்ப்பாட்டம் 40-வது நாளை தாண்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேபோல தான் மேய்ச்சல்தரை பிரச்சினைக்கு இதுவரையில் சரியான ஒரு தீர்வு இல்லாத நிலை காணக்கூடியதாக இருக்கின்றது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து வெளியே வந்தவுடன் ஜனாதிபதியினுடைய மலுப்பலான பேச்சை வைத்துக்கொண்டு இந்த மயிலத்தமடு மாதவனை பிரச்சனைக்கு பிரிச் ஒப் பீஸ் என்கின்ற ஒரு சட்டத்தின் கீழ் எடுக்கச் சொன்ன உத்தரவை போலீசார் எடுப்பதற்கு அந்த கூட்டத்திலே வைத்து மறுத்ததை அதற்கு ஆதரவாக கருத்து வெளியிடாததை வைத்துக் கொண்டு இது நடக்கப் போகின்ற விடயம் அல்ல என்று நாங்கள் கூறி இருக்கின்றோம்.
நேற்றைய தினம் கூட மயிலத்தமடுவுக்குள்ளே மகாவலி அலுவலகத்தின் பக்கத்தில் இருக்கும் காணியைக் கூட உழவு இயந்திரங்களைக் கொண்டு உழவடிக்கும் வேலைகள் செய்து விவசாயத்திற்காக நிலத்தை தயார் படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து இன்னும் இந்த விடயத்தை அதாவது இந்த மயிலத்தமடு மாதவனை விடயத்திலே துரதிஷ்டவசமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடைய குரல் இந்த விடயத்திலேயே எந்த வகையிலும் ஓங்கி ஒலிக்காதது ஒரு கவலையான விடயம். அவர்கள் நான் எடுக்கும் முயற்சியில் ஒட்டிக்கொண்டு வருவது தான் நோக்கம் என்று இருக்கின்றார்களே தவிர இந்த விடயத்தை மக்களுக்காக முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லாத அளவிலே இருப்பது ஒரு கவலையான விடயம்.
அதாவது ஜனாதிபதியின் பாராளுமன்ற குழுவியிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றவர்கள் ஆக குறைந்தது பாராளுமன்ற குழு கூட்டங்கள் நடைபெறும் போதாவது இந்த விடயங்களை பற்றி விசேடமாக மொட்டு கட்சியில் இருக்கின்ற இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி இருக்கலாம். ஆனால் இவர்கள் இதை செய்யாதது கவலையான விடயம்.
ஏனையவரும் மரக்கொத்தியின் கதைகளை கதைக்கின்றார்களே தவிர மங்களராமய சுமணரத்ன தேரர் மரக்கொத்தி வாழை மரத்திலே வந்து கொத்தியது போல அவர்கள் செயல்படுவார்கள் என்று பார்த்தால் அவர்களுடைய வீர வசனம் எல்லாம் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து உண்மையான விஷயங்களை சொன்னால் அவர்களை தாக்குவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பிரதேசத்திலேயே சிங்களவர்களுக்கு பொதுவான மயானத்தினை சேதப்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார். இந்த விடயம் தொடர்பாக மயானத்துடன் சம்பந்தப்பட்ட விடையை மட்டுமல்லாமல் தெற்கிலே வாழும் ஒவ்வொரு தமிழர்களையும் தாங்கள் வெட்டி சாய்ப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற ஒரு பாரதூரமான செய்தியை சொல்லி இருக்கின்றார்.
இந்த செய்தி தொடர்பாக எங்களுடைய இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கின்றார். நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த கடிதத்திற்கு எந்த நடவடிக்கையாவது எடுக்கப்படுமா என்று. ஆனால் கடந்த வாரம் முழுவதும் செய்திகளிலே பார்த்தீர்கள் என்றால் தொடர்ச்சியாக என்னை குறி வைத்து இந்த விடயம் தொடர்பாகவும் எழுதப்பட்டு கொண்டிருக்கின்றது.
களுத்துறை பிரதேசத்தில் ஒரு சில பிக்குமார்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். இது களுத்துறை மாவட்டத்திலேயே எனக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அதனைத் தொடர்ந்து பலாங்கொட கஷ்ஸப் என அழைக்கப்படும் ஒரு தேரர் அவர் சென்று எனக்கு எதிராக நான் தான் மைலத்த நடுவில் வைத்து சிலையை களவெடுத்து விட்டேன் என்று கூறி குற்றப்புலனாய்வுத் துறையினரிலே மனுதாக்கல் செய்து இருக்கின்றார்.
கிழக்கு மாகாணத்தை நாசமாக்கிய முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே மயிலத்தமடு பிரதேசம் வந்து பாலஸ்தீனுடன் ஒப்பிட்டு காசா இஸ்ரேல் சண்டையில் இடம்பெறுவது போன்று அவர் முன்வைத்த காணொளி இது அடுத்தது. அதனைத் தொடர்ந்து பார்த்தோம் ஆனால் அம்பிட்டிய சுமனரட்டின தேரர். கொழும்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார். மீண்டும் எனது பாட்டனார் சீ.மு.இராசமாணிக்கம் விடுதலை புலிகள் அமைப்புக்கு உருவாக்கத்தில் ஒரு பங்காய் இருகின்றார் என்று முறையிட்டுள்ளனர். அவருக்குத் தெரியாது எனது பாட்டனார் 74 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார் என்று.
பக்கியல்ல என்று அழைக்கப்படும் எமது மட்டக்களப்பு அம்பாறை எல்லையிலே இருக்கும் பிரதேசத்திலே ஒரு விகராதிபதி ஒருவர் இறந்து இருக்கின்றார். அந்த விகாரதிபதியினுடைய இறுதிக்கு கிரியையில் கலந்து கொண்ட எல்லா பிக்குமாறும் இணைந்து மயிலத்தம்டு மாதவனை பிரச்சனையை மட்டக்களப்பில் இந்த நடக்கும் சிங்கள மக்களை அகற்றுவதாக ஒரு சில கருத்துக்களை கூறி இருக்கிறார்கள். இந்த விடயங்கள் அனைத்தையும் பார்க்கும் போது இது குறிப்பாக இலக்கு வைத்து என்னை ஒரு தெற்கிலே இனவாதி ஒரு பிரிவினைவாதியாக காட்டுவதற்கான முயற்சி.
ஆனால் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனம் காப்பது உண்மையிலே மன வேதனையை தரும் ஒரு விடயம். ஏனென்றால் பணியாளர்களுடைய பிரச்சினைகளை நான் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் தெரியும் பணியாளர்களுடைய பிரச்சினை. ஆனால் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள்ளே ஜெயந்திபுரம் விவகாரத்தில் நான் நினைக்கின்றேன் ஊடகவியலாளரை தாக்குவதற்கும் அந்த பிக்கு முயற்சி எடுத்திருக்கிறார். இருந்தாலும் கூட அந்த ஊடகவியலாளர் மிக தைரியத்துடன் அந்த காணொளியை எடுத்த படியால்தான் உலகம் முழுவதும் அடாவடிப்புக்குரிய என்னுடைய சுயரூபம் தெரிகின்றது.
இந்த விடயம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை நான் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரை தொடர்பு படுத்தி கேட்டபோது இந்த இடத்தில் ஆர்.டி.எஸ் ஒரு வேலை திட்டம் செய்வதாகவும், அந்த வேலை திட்டத்தில் கல்லுகளை அகற்றி அந்த இடத்தில் போட்டதாகவும், அது உடனடியாக திங்கட்கிழமை அகற்றுவதாக ஆணையாளர் எனக்கு கூறியிருந்தார். திங்கட்கிழமை அந்த இடத்திலே வடிகான் அமைப்பதில் அதிகமாக இருந்த கல்கள் போன்ற விடயங்களை அகற்றுவதற்கு மாநகர சபை ஊழியர்களும் வாகனங்களும் சென்றபோது அந்த இடத்தில் இருந்த அந்த பிக்குக்கு வேண்டப்பட்ட ஒருவர் அனுராதா யஹம்பதின் ஒரு அல்லக்கை இருந்து பிக்கு வரும் வரைக்கும் அகற்ற மாட்டோம் என்று ஒரு செய்தியை சொன்னதன் காரணத்தினால் தான் அதனை நிவர்த்தி செய்ய முடியாமல் போனது.
இந்த பிக்குவை வைத்துக்கொண்டு இனவாதம் கக்குவதும் தமிழர்களுக்கு எதிரான விடயங்களை செய்வதும் எதிர்வரும் தேர்தலில் மீண்டும் மொட்டின் உடைய கை ஓங்குவதாக இருந்தால் இந்த மாவட்டத்திலே இருக்கின்ற தமிழ் மக்களை வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு தொல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதே நேரத்தில் ஏதோ ஒரு சிங்கள மக்களை தொல்லைப்படுத்துகின்றோம் என்கின்ற மாதிரியான செய்தியை தெற்கிலே இருக்கிற மக்களுக்கு சொல்லி இந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் லாபம் தேடும் இந்தப்பிக்குவை உடனடியாக ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
அனுராதபுரத்திலே ராஜாங்கர என்று சொல்லப்படும் அந்த பிக்குவை கைது செய்திருந்தார்கள் கடந்த காலத்திலேயே அசாத் சாலி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்திருந்தார்கள் ஏன் ஒரு நட்டாஷா என்று ஒரு நகைச்சுவை செய்த ஒருவரை தன்னுடைய அந்த காணொளியை ஊடகங்களிலே போட்டதாக கூறி ஒரு ஊடகவியலாளரை கூட ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சி எடுத்தனர். இவ்வாறாக தமிழர்களை துண்டு துண்டாக தான் வெட்டுவேன் என்று சொன்ன ஒரு பீக்குவை இந்த ரணில் விக்ரம் சிங்க ஆட்சியிலே கைது செய்வார்களா என்று நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் இவ்வாறாக தமிழ் மக்களுக்கு மிக மோசமாக இந்த பிக்கு கதைக்கும் போது ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கி கொண்டு இந்த மாவட்டத்திலேயே இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருப்பது மிகவும் மன வேதனை தரும் ஒரு விடயம்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு நான் இந்த இடத்தில் ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றேன். தயவுசெய்து இந்த நாட்டிலே பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீங்கள் முன் வாருங்கள். நீங்கள் அரசியல் செய்யாமல் நாட்டு மக்களினுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக நாங்கள் எத்தனையோ ஆலோசனைகளை கூறி இருக்கின்றோம். கடந்த காலத்திலேயே வரவு செலவு திட்டத்தில் இந்த மக்கள் மத்தியிலே எங்களுடைய அரச ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் போன்றவர்கள் வைத்திய அதிகாரிகள் போன்றவர்களிடம் லட்சக்கணக்கான வரியை நீங்கள் எடுக்கும் போது அமைச்சர்மார் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் நான்கு ஐந்து வாகனங்களை வைத்து அநியாயமாக்குவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை நிறுத்தி விடுங்கள் இல்லாவிட்டால் இந்த சிகரெட் கம்பெனி மற்றும் ஏனைய தனியார் கூடுதலாக 10வீதம் வர்த்தகமும் நடத்துபவர்களிடம் வரியை அறவிடுங்கள் என்று சொன்னதை கூட அவர் செவிமடுக்காத ஒருவர்.
அதேபோலத்தான் நாங்கள் ஜனாதிபதி செயலத்தில் தரும் வாக்குறுதிகளை கூட நாட்டிலே இருக்கும் பொலிசாரோ ராணுவத்தினரோ நடைமுறைப்படுத்தாத இடத்திலேயே அவர் நாங்கள் அவர்களை நம்பி நாங்கள் எவ்வாறு அவருடன் செயல்படுவது என்கின்ற கேள்வி எமக்கு இருக்கின்றது.
உண்மையிலேயே அலி சப்ரியை பொறுத்தவரையிலே அவர் கோட்டாபய ராஜபக்சவை சிறைக்கு செல்லாமல் பாதுகாத்தவர் என்பதற்காக கிடைக்கப்பெற்ற பரிசு தான் தேசிய பட்டியல். அதனை தொடர்ந்து அவருக்கு நீதி அமைச்சி கிடைத்தது, கோட்டபாய ராஜபக்ஷவினுடைய கடந்த காலத்திலேயே சேனல் 4 போன்ற விடயங்களிலே பல குற்றச்சாட்டுகள் நீதித்துறைக்கு எதிராக வைக்கப்பட்டிருந்தது அவை எல்லாம் அலி சப்ரி நிதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் நடந்தவைகள்.
எனினும் அதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க தற்பொழுது வந்ததன் பிற்பாடு வெளிவிவகார அமைச்சராக வந்து கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றுவதுதான் தற்போதைய பொறுப்பு. அந்த பொறுப்புடன் சேர்த்து அவர் சுற்றுலா பயணிகளின் ஒருவரை போன்ற நாடு சுற்றும் ஒருவராக எல்லா நாடுகளுக்கும் சென்று அவர் வருகின்றார். இதிலே மக்களுடைய நிதி பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்க இந்த முக்கியமான கூட்டங்களிலே கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை கூட அதிலே நான் பார்த்தேன். ஒரு புகைப்படத்தில் சீனாவிலேயே வங் என்று அழைக்கப்படுகின்ற மாநிலத்தின் ஆளுநர் இது வந்து இவர்களுடைய நண்பர்கள் வியாபாரம் செய்வதற்காக தங்களுடைய சொந்த பணத்திலேயே கூட்டிச் சென்றார் என்று சொன்னாலும் கூட வியாபாரங்களை வளர்ப்பதற்காகவும் அறிமுகங்களை கூட்டுவதற்காகவும் நாட்டு மக்களிடம் இருக்கின்ற சொத்தை அபகரிப்பது என்று தான் கூற வேண்டும்.