இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்..!

keerthi
0




தமிழகத்தின் நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.


குறித்த கப்பலுக்கு 'செரியாபாணி” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தியும்  வெளியிட்டுள்ளது.


முன்னதாக குறித்த கப்பல் சேவை நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ள குளிரூட்டல் வசதியுடன் கூடிய இந்த பயணிகள் கப்பல் இன்றும் நாளையும் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வருவதற்கு 6 ஆயிரம் லீற்றர் எரிபொருள் தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


இவ்வாறுஇருக்கையில்  நாகப்பட்டினத்தில் இருந்து - இலங்கைக்கு பயணிக்க 6 ஆயிரத்து 500 இந்திய ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


அத்தோடு  பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கையை வந்தடைய முடியும் எனவும் கூறப்படுகின்றது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top