இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், காசாவின் முக்கிய நெடுஞ்சாலையான வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையை இஸ்ரேல் படைகள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளன.
அத்தோடு இந்தச் சாலையின் குறுக்கே நிற்கும் இஸ்ரேல் பீரங்கிகள் தங்களை நோக்கி முன்னேறும் வாகனங்களை எச்சரித்து வருகின்றன.
இஸ்ரேல் படைகளுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினரும் தீவிர சண்டையிட்டு வருவதால், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டு என்று கூறுகிறது. ஆனால் அது நடக்காது எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.