இஸ்ரேலை மிரள வைத்த "பாராசூட்" கமாண்டோ...காசாவில் நள்ளிரவில் என்ன நடந்தது

keerthi
0





 காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஹமாஸின் முக்கிய கமாண்டோ ஒருவரை இஸ்ரேல் தீர்த்துக் கட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான யுத்தம் 3ஆவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இதில் முதலில் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. மேலும், பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது.


 எனினும் அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. முதலில் காசா பகுதியில் ஏவுகணை தாக்குதலை வரிசையாக நடத்திய இஸ்ரேல், இப்போது தரைவழி தாக்குதலையும் ஆரம்பித்துள்ளது.


 இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாராசூட் கமாண்டோ கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காசா பகுதியைப் பொறுத்தவரை அவர்களின் பலமே.. அதை அழிக்கும் வகையிலும் இப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் சுமார் 150க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதை இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


அத்தோடு கடந்த சில காலமாகவே காசா மீது தரைவழி படையெடுப்பை நடத்த உள்ளதாக இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாகக் காசா பகுதிக்குள் நுழைந்து தாக்குதலை நடத்துவதும்.. அதன் பிறகு உடனடியாக இஸ்ரேலுக்குத் திரும்பி விடுவதையும் இஸ்ரேல் வாடிக்கையாக வைத்துள்ளது. இதற்கிடையே இப்போது காசா மீதான தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.


 தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இந்த முடிவை இஸ்ரேல் நாட்டின் போர்க்கால அமைச்சரவை எடுத்துள்ளது. ஹமாஸ் வசம் இருக்கும் பிணையக்கைதிகளை விடுவிப்பதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலையில், தாக்குதலைத் தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. இதனால் வரும் காலங்களில் போர் மேலும் உக்கிரமடையும் என்றே அஞ்சப்படுகிறது.


எனினும் இதற்கிடையே இஸ்ரேல் தனது தாக்குதலில் ஹமாஸின் முக்கியமான படை கமேண்டோக்களில் ஒருவரான அசெம் அபு ரகாபா என்பவரைக் கொன்றுள்ளது. கடந்த அக். 7ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்களில் அந்த அபு ரகாபாவும் முக்கியமானவர். அவரை தான் இப்போது இஸ்ரேல் குறிவைத்துத் தூக்கியுள்ளது.


கடந்த அக்டேபார் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடந்த தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பாரசூட் மூலம் இஸ்ரேலுக்கு நுழைந்து தாக்குதலை நடத்தினர். எல்லையில் தடுப்புகள் இருந்த போதிலும், அதைத் தாண்டி பாராசூட் மூலம் உள்ளே நுழைந்தனர். இஸ்ரேலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதில் இந்த பாராசூட் வீரர்களுக்கு முக்கிய பங்கு இருக்கவே செய்கிறது.


மேலும் இந்த பாராசூட் தாக்குதலை முன்னின்று நடத்தியவர் தான் அபு ரகாபா. மேலும், இஸ்ரேல் ராணுவம் மீது அப்போது நடந்த டிரோன் தாக்குதலுக்கும் மூளையாகச் செயல்பட்டவர் இவர் தானாம். அவரை தான் இஸ்ரேல் ராணுவம் இப்போது காலி செய்துள்ளது. ஹமாஸின் முக்கிய கமேண்டோக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இது போரில் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


இது ஒரு பக்கம் இருக்க ஹமாஸின் சுரங்கங்கள் மீதான தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. வடக்குப் பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியதால், பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போர் மேலும் மேலும் தீவிரமடையும் என்பது உறுதியாகி இருக்கிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top