தங்கம் தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தம்!

keerthi
0





தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கிளிநொச்சி - திருநகர் பகுதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வுப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.


அத்தோடு இன்று முற்பகல் 9 மணி முதல் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் ஜெ.சுபராஜினி முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் எந்தவித பொருட்களும் காணப்படாத நிலையில் அகழ்வு பணிகள் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top