பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 600 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, தமது வசிப்பிடத்தில் மறைத்து வைத்திருந்த 1080 போதை குளிசைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இநு்து சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.