விசா சேவைகள் மீண்டும் ஆரம்பம்

keerthi
0




கனடாவின் ஒட்டாவாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களாக விளங்கும் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய அலுவலகங்களில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க  முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது.


எனினும் தற்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பரிசீலனைகள் மற்றும் கனடியர்களின் பிரயாணத் தேவைகள் ஆகியவற்றை  கணக்கில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு நிலைமையை பரிசீலித்த பிறகு இது தொடர்பாக கனடாவின் சமீபத்திய நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்து தற்போது கனடியர்களுக்கான  விசா சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி, ஒக்டோபர் 26முதல் அமுலுக்கு வரும் பின்வரும் விசா வகைகள்


நுழைவு விசா

வணிக விசா

மருத்துவ விசா, மற்றும்

மாநாட்டு விசா


அத்தோடு  அவசரநிலைகள் உயர் ஸ்தானிகராலயத்தால் தொடர்ந்து கவனிக்கப்படும் என்றும் மேலும் மாற்றங்கள் செய்யப்படின் அவை பற்றியும்  தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top