கோர விபத்தில் இளம் பெண் பலி..!

keerthi
0






புலத்சிங்கள, பரகொட, வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த 34 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்..


புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த ரசிகா பிரியதர்ஷனி என்ற திருமணமான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


புலத்சிங்களவில் இருந்து பரகொட செல்லும் வீதியில், கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், லொறியொன்று நிறுத்தியதன் காரணமாக லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


அத்தோடு இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


விபத்தை அடுத்து அந்த இடத்திற்கு வந்த ஒருவர் தாக்கியதில் லொறியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


புலத்சிங்கள மரண விசாரணை அதிகாரி சிரத் பரத பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மேலதிக பரிசோதனைக்காக சடலத்தை ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.


இந்த நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top