பாடசாலை மாணவர்களிடயே பரவும் நோய்...!

keerthi
0



 


கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.


அதுமட்டுமல்லாது யாழ் வலயக்கல்வி வலையத்திலும் ஆரம்பகட்டமாக இந்த நோய் பரவ ஆரம்பித்துள்ளது.இவ்வாறுஇருக்கையில் கொழும்பு பிராந்திய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் கடிதம் எழுதி, கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பள்ளி மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


அத்தோடு , பாடசாலையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்களை மற்ற மாணவர்களிடமிருந்து தனித்தனியாக அமர்த்துமாறும் வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் தர மாணவர்கள் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிபாரிசுகளின் பிரகாரம் நேற்று (10) முதல் பாடசாலையின் குறித்த வகுப்புகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்தார்.


குறித்த பாடசாலையில் சுமார் முப்பத்தைந்து மாணவர்கள் இந்த கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கொட்டாஞ்சேனை மத்திய உயர் கல்லூரியின் ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் தரங்கள் இந்த வாரம் மூடப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பத்தும் கொடிகார தெரிவித்தார்.


அத்தோடு கண் நோய் சுமார் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும், குழந்தைகளின் கண்கள் சிவந்து அரிப்பு ஏற்பட்டால், வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டாம் என்றும் மருத்துவரகள்; பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது இந்த கண் வைரஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரவி வருகிறது.


எனவே அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமானதுடன், கண் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணீரின் ஊடாக இந்த வைரஸ் தொற்று மிக விரைவாக ஏனையவர்களுக்கு பரவுவதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


எனினும் பொதுவாக வெப்பமான காலநிலையில் கண் நோய்கள் ஏற்படுகின்ற போதிலும் கடந்த மழைக்காலத்தில் இந்த ஐ வைரஸ் பரவியமையை விசேட அம்சமாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top