சீனா கடந்த ஆண்டு அதன் அணு ஆயுத இருப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. தற்போது சுமார் 500 செயல்பாட்டு அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், பெய்ஜிங் 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் ஆயுத இருப்புகளை இரட்டிப்பாக்கி 1,000 அணுகுண்டுகளுக்கு மேல் வைத்திருக்கும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீனா "முதலில் தாக்க மாட்டோம்" கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது என்று அது கூறியது.
அந்த அறிக்கையில் ஆயுத இருப்புகளின் அதிகரிப்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், சீனாவின் இருப்புகள் இன்னும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் இருப்புகளை விட குறைவாகவே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ரஷ்யா சுமார் 5,889 போர் ஏவுகணைகள் கொண்ட அணு ஆயுத இருப்பை கொண்டுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா 5,244 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது.