பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது எவ்வாறு? ஹமாஸ் தாக்குவது ஏன்? வெளியான தகவல்கள்..!

keerthi
0

  




 இஸ்ரேல் பலாஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காஸாவை மொத்தமாக அழிக்காமல் விட மாட்டேன்.. இதுவரை காஸா எதிர்கொண்டதிலேயே மிகப்பெரிய தாக்குதலை நாங்கள் கொடுக்க போகிறோம். காஸாவில் இனி ஹமாஸ் இயக்கம் எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலை நடத்த இருக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.


இஸ்ரேலின் மீது காஸாவில் இருந்து கொண்டு ஹமாஸ் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்தான் இதற்கு காரணம். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல், மீது காஸாவின் ஹமாஸ் இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியது. அத்தோடு இதில் 300 பேர் வரை பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் நடத்தும் பதில் தாக்குதலில் இதுவரை இஸ்ரேல் பதில் ஏவுகணை, விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அத்தோடு இதில் இதுவரை 250 பேர் வரை பலியாகி உள்ளனர்


1947ல் இருந்து பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் வெஸ்ட் பேங்ங் பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடங்கியது முதல் உலகப்போரின் முடிவில் இருந்துதான். தற்போது இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று அழைக்கப்படும் பகுதிகள் எல்லாம் முதல் உலகப்போருக்கு முன் உதுமானியப் பேரரசு (Ottoman Empire) கட்டுப்பாட்டில் இருந்தது.


எனினும் அப்போது இங்கு அரபு இஸ்லாமியர்கள் அதிக அளவிலும், யூதர்கள், கிறிஸ்துவர்கள் மிக குறைவான அளவிலும் இருந்தனர். அதன்பின் முதல் உலகப் போர் முடிந்து, உதுமானியப் பேரரசு வீழ்ந்த பின் இந்த பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அப்போதில் இருந்தே இந்த பகுதி பலாஸ்தீனம் என்றுதான் அழைக்கப்பட்டது. இந்த பகுதியை யூதர்கள் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக பூமியாக கருதினார்கள். இதனால் யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு குடியேற தொடங்கினார்கள். அப்போதே யூதர்கள் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சின்ன சின்ன நில தகராறுகள் ஏற்பட்டது. இங்கு ஒரு வகையில் யூதர்களின் குடியேற்றத்திற்கு பிரிட்டிஷ் மறைமுகமாக ஆதரவு அளித்தது.


 இதனால் பல நூறு வருடங்களாக அங்கு வசித்து வந்த இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை இழக்க நேரிட்டது. இதை தொடர்ந்துதான் இரண்டாம் உலகப் போர் வந்தது. இதில் யூதர்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்ட நிலையில், இவர்களுக்காக தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, பாலஸ்தீனம் குறி வைக்கப்பட்டது. பாலஸ்தீனம் 1947ல் ஐநா மூலம் மொத்தமாக பங்கு போடப்பட்டது. அத்தோடு ஐநாவின் திட்டப்படி பாலஸ்தீனம், அரபு மற்றும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இரண்டு நாடாக பிரிக்கப்படும். பாலஸ்தீன மக்களுக்கு 50%க்கும் குறைவான நிலம் ஒதுக்கப்படும்.


ஜெருசலேம் சர்வதேச கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஐநா கூறியது. ஆனால் அங்கு பூர்வீகமாக இருந்த பாலஸ்தீன மக்கள் இதை ஏற்கவில்லை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக இதை அவர்கள் கருதினார்கள். ஆனால் யூதர்கள் இதை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் என்ற தனி நாட்டை அறிவித்தனர். பாலஸ்தீனம் இதை ஏற்றுக்கொள்ள வில்லை, இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் 1948ல் போருக்கு சென்றது. அத்தோடு 1 வருடம் நடந்த போரில் இஸ்ரேல் வென்றது.


மேலும் இந்த போர்தான் மொத்தமாக அங்கு நிலைமையை மாற்றியது. இந்த போரில் வென்ற இஸ்ரேல், ஐநா கொடுத்ததை விட கூடுதல் நிலங்களை பாலஸ்தீனத்தில் இருந்து போருக்கு பின் அபகரித்தது. 70%க்கும் அதிகமான நிலம் பாலஸ்தீனத்திடம் இருந்து பறிபோனது. இதில் பாலஸ்தீனத்துடன் இணைந்து போரிட்ட அரபு நாடுகளான ஜோர்டன் வெஸ்ட் பேங்க் பகுதியை கைப்பற்றியது. எகிப்து காஸாவை கைப்பற்றியது. ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் - ஜோர்டன் இடையே பங்கிடப்பட்டது.


அப்போது பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பை தொடங்கிய இஸ்ரேல் அதன்பின் வரிசையாக தினமும் ஆக்கிரமிப்பை செய்து வந்தது. இதனால் பாலஸ்தீன மக்கள் பல லட்சம் பேர் அகதிகளாக மாறினார்கள். யூதர்கள் பல லட்சம் பேர் பாலஸ்தீன நிலங்கள், வீடுகளை ஆக்கிரமித்தனர். இப்படி ஆக்கிரமிப்பு செல்ல செல்ல அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மீண்டும் மோதல் தீவிரம் ஆனது. இதனால் 1967ல் மீண்டும் போர் மூண்டது. இந்த இரண்டாவது போரிலும் இஸ்ரேல் வென்றது. இந்த 6 நாள் போரில் இஸ்ரேல் கட்டுப்பாட்டிற்குள் காசா, வெஸ்ட் பேங்க் இரண்டும் வந்தது. ஆனால் இங்கு பாலஸ்தீன மக்கள் அதிகம் இருந்தனர். இந்த நிலையில் கிழக்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக தங்களுடன் இணைந்தது. 1987, 1993 மோதல் என்று வரிசையாக பல்வேறு மோதல்களில் இஸ்ரேல் பாலஸ்தீன நிலங்களை கைப்பற்றியது.


இதன்பின் 1995ல் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ரபின் இடையே இரண்டு நாட்டு கொள்கைக்கான ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை. 1995ல் செய்யப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தில் வெஸ்ட் பேங்க், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்தது. பாலஸ்தீன விடுதலையில் பிஎல்ஓ இருந்தாலும் ஆயுதம் தாங்கிய அமைப்பான ஹமாஸ் படையும் காசாவில் தோன்றிரியது. அதன்பின் 2000-2005 வரை காஸாவிலும், ஜெருசலேமிலும் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் 2005ல் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. காஸா ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது. ஆனால் காஸாவின் அனைத்து எல்லைகளும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது.


2006ல் காஸா தேர்தலில் ஹமாஸ் படை வென்று ஆட்சியை பிடித்தது. ஆனால் இதை ஃபட்டா போன்ற பாலஸ்தீன அமைப்புகளே எதிர்த்தன. இதனால் காஸா ஹமாஸ் கட்டுப்பாட்டிலும், வெஸ்ட் பேங்கின் சியில் பகுதிகள் பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் ஃபட்டா அமைப்பின் கட்டுப்பாட்டிலும் வந்தது. ஆனாலும் வெஸ்ட்பேங்க் கிட்டத்தட்ட இஸ்ரேலின் மறைமுக கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனினும் இப்போது இந்த மீதமுள்ள வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்புகள் மூலம் ஆக்கிரமித்து வருகிறது. மாறாக காஸாவில் ஹமாஸ் படையை தாக்கி, அங்கே முழுக்க முழுக்க எல்லைகளை அடைத்து காஸாவையும் இஸ்ரேல் கட்டுப்படுத்த முயன்று வருகிறது. தற்போது நடந்து வரும் மோதலில் காஸாவை மொத்தமாக கைப்பற்றும் திட்டத்தில் இஸ்ரேல் உள்ளது.


இதில் ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் தங்களின் தலைநகராக கருதுகிறது. அதே சமயம் பாலஸ்தீனம் இதை தங்களின் புனித பூமியாக கருதுகிறது. ஜெருசலேம் பகுதியை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த பின் இந்த மோதல் மேலும் பெரிதாகி உள்ளது. தற்போது நடந்து வரும் மோதலில் காஸாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்துவதால், காஸாவையும் ஒருவேளை இஸ்ரேல் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.


இந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேலின் மீது காஸாவில் இருந்து கொண்டு ஹமாஸ் இயக்கம் மீண்டும் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top