இஸ்ரேல் - ஹமாஸ் உக்கிர போர்: மொசாட் கதிகலங்க வைத்த ஹமாஸ் சூத்திரதாரி: வெளியான பின்னணி

keerthi
0




உலகின் தலை சிறந்த உளவு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்ரேல் உளவுத்துறை மொசாட் ஏமாற்றி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவின் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


கடந்த 7 ம் திகதிசனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஹமாஸின் பாலஸ்தீன உறுப்பினரான மொஹமட் டைஃப் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மொஹமட் டைஃப் மிகவும் இரகசியமாக இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், ஹமாஸ் உறுப்பினர்களின் மூத்தவர்களுக்கு மட்டுமே இது தெரியும் என்றும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட குழுக்களுக்குக் கூட எதுவும் தெரியாது என்றும் கூறப்படுகிறது.


கடந்த 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஹமாஸ் தாக்குதலை 'அல் அக்சா வெள்ளம்' என்று மொஹமட் டைஃப் அழைத்துள்ளார்.


'அல் அக்ஸா' என்பது இஸ்ரேலில் உள்ள ஒரு மசூதி. இந்த மசூதிக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் கடந்த காலங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


காசா பகுதியில் நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலில் எண்ணிக்கை 2,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆறாவது நாளாக வன்முறை தொடர்ந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றன.


மேலும் இந்தப் போரில் 1,300 இஸ்ரேலியர்கள் இறந்துள்ளதுடன் 3,268 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களின் 443 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வடக்கு காசாவில் அல் கராமா, அல் ரிமால் மற்றும் அல் நசிர் உள்ளிட்ட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் உள்ள ஏராளமான குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதில் வசித்துவந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் பலியாகியுள்ளனர். 


சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை காஸாவிற்கு மின்சாரம், எரிபொருள் அல்லது மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களினால் காசாவில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,350 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இவ்வாறுஇருக்கையில் காசாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தின் சுரங்க பாதுகாப்பு வலையமைப்பை இலக்குவைத்து தொடர் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் கடுமையான விமானத் தாக்குதல்களை காசா மீது மேற்கொண்டு வருகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top