உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இன்றைய 27 வது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கின்றன.
இதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், உலக கிண்ண கிரிக்கட் தொடரின் நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சவுட் ஷஹீல் 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சு சார்பில் தப்ரைஸ் சம்ஷி 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த நிலையில், 271 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எய்டன் மார்க்ரம் 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.