கொழும்பு நகரில் மழையினால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என இனங்காணப்பட்ட 20 இடங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதன்படி, தாழ்நில அபிவிருத்தி சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றி புதிய வீடுகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையத்தில் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 27ஆம் திகதி காலை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 20 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.