மன்னாரில் அம்புலன்ஸில் போதைப்பொருள் கடத்திய நபர் அதிரடியாக இந்தியாவில் வைத்து கைது...!

keerthi
0





மன்னார் வைத்தியசாலையின்  அம்புலன்ஸ் வாகனத்தில்  ஐஸ் போதை பொருள் கடத்தி விற்பனை செய்த அம்புலன்ஸ் சாரதியை மன்னார்  பொலிஸார் பிடித்து விசாரித்த போது  பொலிஸ் உத்தியோகத்தரின் கட்டை விரலை கடித்து விட்டு பொலிஸாரிடமிருந்து தப்பிய நபர் இன்று காலை  இராமேஸ்வரத்திலுள்ள குந்துகால் கடற்கரைக்கு அருகில் வைத்து மரைன் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார்  என தகவல் வெளியாகி உள்ளது.


இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே நேற்று இரவு  இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்திய படகில் வந்து இறங்கிய இலங்கை நபரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சந்தேகத்தின் பெயரில் மண்டபம் மரைன் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.


அத்தோடு தகவலின் அடிப்படையில் மரைன் பொலிஸார் இலங்கை நபரை பிடித்து மண்டபம் மரைன்  காவல் நிலையத்தில் வைத்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.


விசாரணையில், இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியை சேர்ந்த 43 வயதான இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் தனுஷ்கோடி வழியாக அகதியாக  வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்து பின்னர் 1996 ஆம் ஆண்டு கப்பல்கள் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார்.


இவ்வாறுஇருக்கையில் , மன்னார் மாவட்டத்தில்; உள்ள அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக  பணி புரிந்து வரும் நிலையில் கடந்த ஒரு பத்து நாட்களுக்கு முன்பு அரச  மருத்துவமனை ஊழியரொருவருடன்  சேர்ந்து சுமார் 176 கிராம் ஐஸ் போதை பொருளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்த போது இருவரையும் முருங்கன் காவல் நிலைய பொலிஸார் பிடித்து விசாரணை செய்த போது இவர் விசாரணை செய்த பொலிஸ் உத்தியோகத்தரின் விரலை  கடித்து விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.


இவரை மன்னார் முருங்கன் காவல் நிலைய பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் இலங்கை தலைமன்னாரிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்து பைபர் படகில் புறப்பட்டு  தனுஷ்கோடி அடுத்துள்ள மணல் திட்டில் இறங்கியுள்ளார்.


இதன் பின்னர் தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த நபரொருவர் நாட்டுப்படகில் இவரை அழைத்து வந்து  பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே இறக்கி விட்டு சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் குறித்த நபருக்கு ஐஸ் போதை பொருள் தமிழகத்தில் இருந்து  கடத்திய நபர்கள்  உதவியுடன்  தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவினாரா என்ற  கோணத்தில்  விசாரணை நடத்தி வருகின்றார்.


அத்தோடு இவர் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்த மரைன் பொலிஸார் விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக  மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top