சட்ட விரோதமாக வல்லபட்டை தொகையை கொண்டு சென்ற ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் வளான ஊழல் மோசடி தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை – கெலிடோ கடற்கரை பகுதியில் மகிழுந்து ஒன்றில் குறித்த வல்லபட்டை தொகையை கொண்டு செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு கைதானவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, குறித்த மகிழுந்தில் இருந்த 50 கிலோகிராம் வல்லபட்டை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.