2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 30ஆவது போட்டி இன்று (30) இடம்பெறுகின்றது.
அத்தோடு புனேவில் இடம்பெறும் குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
எனினும் இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக பெத்தும் நிஸ்ஸங்க 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், ஆப்கானிஸ்தான் அணியின் ஃபசல்ஹக் பரூக்கி 34 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இவ்வாறுஇருக்கையில், 242 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அத்தோடு அணிசார்பில் அதிகபடியாக அஸ்மத்துல்லா உமர்சாய் 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 48 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.