எதிர்காலத்தில் உரத்திற்கான நிர்ணய விலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு உர வகைகள் விற்பனை செய்யப்படுவதே இதற்கு பிரதான காரணமாகும் என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
பல்வேறு விலைகளுக்கு உர வகைகள் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்தும் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, விவசாய அமைச்சு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எனினும் அதன்படி உர விற்பனை தொடர்பான ஆய்வுகளின் பின்னர் உரத்துக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.