சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு - வம்பியடி பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அதாவது இறக்காமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த பெண் தமது குடும்பத்தினருடன் உந்துருளியில் பயணித்த போது காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.