இலங்கை பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை (21) காலமானார்.
நாராஹேன்பிட்டவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷ
காலமாகும் போது அவர் 85 வது அகவையை கடந்திருந்தார் என கூறப்படுகின்றது.
அத்தோடு அவர் செலிங்கோ குழுமத்தின் தலைவர் என்பதுடன், செலான் வங்கியின் ஸ்தாபகரும், ஆரம்ப கால தலைவராகவும் கடமையாற்றியிருந்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றதுடன், பட்டயக் கணக்கியலை அவர் ஐக்கிய ராச்சியத்தில் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.