யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் மதுபோதையில் நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு நோயாளர் ஒருவரை பார்வையிடுவதற்கு சென்றிருந்த இருவர், வைத்தியசாலையில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளரினால் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.