இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பை கருத்திற் கொண்டு, அடுத்த ஆண்டு முதல், வாகன இறக்குமதி கொள்கையை, அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
திறைசேரி, மத்திய வங்கி, ஜனாதிபதி செயலகம் மற்றும் வாகன இறக்குமதியாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்று வாகன இறக்குமதி கொள்கையொன்றை தயாரித்து வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த கொள்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.