இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த போராட்டமானது நாளைய தினம் இடம்பெறும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் அறிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு கடந்த 4 வருடங்களுக்கும் அதிக காலம் மின்சார சபை ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.