இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. அதிகரித்த பாதுகாப்பு

keerthi
0




 அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்தடைந்தார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் காசா போர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஜோ பைடன் வருகையால் டெல் அவிவ் நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளது.


இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 12 நாட்களாக தொடர்ந்து வருகிறது.இந்த போரில் தீவிரவாதிகள் கொல்லப்படுவது ஒரு புறம் எனில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் , கட்டிடங்கள் குண்டு வீச்சால் உருகுலைந்து போய் இருக்கின்றன.


இவ்வாறுஇருக்கையில் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலின் டெல் அவைவ் நகருக்கு சென்றடைந்தார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடன் ஆலோசனை நடத்துகிறார். போர் குறித்து ஆலோசனை நடத்த இஸ்ரேலுக்கு பைடன் வந்திருப்பதால் வரலாறு காணாதா பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல் அவைவ் நகரில் செய்யப்பட்டுள்ளன,, இஸ்ரேலில் 5 மணி நேரம் தங்கியிருக்கும் அதிபர் பைடன் அதன்பின்னர் புறப்பட்டு மீண்டும் அமெரிக்கா செல்கிறார்.


முன்னதாக இஸ்ரேல் பயணத்தை முடித்துவிட்டு, ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு சென்று . அங்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்சிசி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோருடன் பைடன் முக்கிய ஆலோசனை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காஸா மருத்துவமனையில் நடந்த குண்டு வெடிப்பால் பாலஸ்தீன அதிபர் பைடனை சந்திக்க மறுத்து விட்டார். இதையடுத்து பைடனின் ஜோர்டான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக இன்று காலை ட்விட்டரில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் நான் இன்று இஸ்ரேலுக்குச் செல்கிறேன். பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஹமாஸ் நிற்கவில்லை என்பதை தெளிவுபடுத்துவேன் என்றார்.


இதனிடையே காசாவில் உள்ள மருத்துவமனையில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு குறித்து ட்விட்டரில் தனது கவலையை ஜோ பைடன் வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காஸாவிலுள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர்ச் சேதத்தால் நான் கோபமும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். இந்தச் செய்தியைக் கேட்டவுடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரிடம் பேசினேன். மேலும் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்குமாறு எனது தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன்.


அத்தோடு மோதலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற அப்பாவிகளுக்கு அமெரிக்கா சார்பில் இரங்கல் தெரிவிக்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top