காலி அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.