கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொருட்களை ஏற்றும் தொடருந்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஹாலிஎல பதுளை தொடருந்து மார்க்கத்தில் ஹப்புவத்தை பகுதியில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
அத்தோடு விபத்தில் காயமடைந்த பெண்ணை பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹப்புவத்தை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.