இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மிகவும் நுட்பமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான இந்தோனேசிய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து கட்டார் டோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்தப் பெண் ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைகளுக்கு இடையில் நுட்பமான முறையில் மறைத்து வைத்து 4598 கிராம் கொக்கைன் போதைப்பொருளைக் கொண்டு வந்துள்ளார் .
அத்தோடு நேற்று மதியம் 04.10 மணியளவில் QR 654 என்ற Qatar Airways விமானத்தில் அவர் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.