பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்களை அந்த பட்டியில் இருந்து நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்தோடு ரமேஷ் என்ற நிக்லபிள்ளை அன்டனி எமில் லக்ஸ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோரின் பெயர்களே, குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
எனினும் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்னவினால் வெளியிடப்பட்டுள்ளது