வார்னிங் இன்றி தாக்கினால் பிணைக்கைதிகளை கொன்று விடுவோம்- இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க மிரட்டல்!

keerthi
0




 பொதுமக்கள் வீடுகள் இருக்கும் இடத்தில் எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் தாக்குதல் நடத்தினால் சிறைபிடித்துள்ள இஸ்ரேல் மக்களை கொலை செய்து விடுவோம் என்று ஹமாஸ் குழு பகிரங்க எச்சரிக்கை  ஒன்றை விடுத்துள்ளது.


இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகின்றது. எனினும் குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 7ம் தேதி, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதலை தொடங்கினர்.



வெறும் 20 நிமிடங்களில் இஸ்ரேலை நோக்கி 5 ஆயிரம் ராக்கெட்டுகள் மழை போல பொழிந்தன.அத்தோடு  ஒருபக்கம் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய போது மற்றொரு பக்கம் வான்வழியாகவும் தரைவழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். இஸ்ரேலில் எல்லையோர பகுதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பலரை பிணைக்கைதிகளாக காசா பகுதிக்கு பிடித்து சென்றனர். இவர்களில் பொதுமக்கள், ராணுவ வீரர்களும் அடங்குவர்.



ஹமாஸ் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. இதனால் இரு தரப்பிலும் மோதல் முற்றி உயிர்பலிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டன. மற்றொரு பக்கம் காசா பகுதியை முழுமையாக முற்றுகையிட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. மின்சார விநியோகம் இணைய இணைப்பை துண்டிக்கவும் இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.


இதனிடையே, பொதுமக்கள் குடியிருப்புகளில் வார்னிங் எதுவும் கொடுக்காமல் தாக்குதல் நடத்தினால் சிறைபிடித்துள்ள இஸ்ரேலிய மக்களை தூக்கிலிடுவோம் என்று ஹமாஸ் பயங்கரவாத குழு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பின் ஆயுத பிரிவு கூறு கூறுகையில், முன் எச்சரிக்கை எதுவும் இன்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், நாங்கள் சிறைபிடித்துள்ள இஸ்ரேலியர்களை கொலை செய்வோம்" என்று தெரிவித்துள்ளது.


அத்தோடு, எதிரிகளுக்கு மனிதாபிமானம் மற்றும் நெறிமுறைகள் எதுவும் புரிவது இல்லை.எனவே, அவர்களுக்கு புரியும் மொழியில் தீர்வு காண்போம் என்று எச்சரித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான யுத்தத்தத்தால் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதுவரை 1,200க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 9 பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.


இதனிடைய்யே, காசா மீதான வான்வழி தாக்குதல் தற்போதுதான் ஆரம்பித்து இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகூ தெரிவித்துள்ளார். மேலும், காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை மீட்க எதையும் செய்ய தயராக இருப்பதாகிறோம். ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனியர்கள் இன்னும் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் இஸ்ரேலுக்குள் உள்ளனர்" என்றார். இதனிடையே, பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ள தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எகிப்து உதவியை இஸ்ரேல் நாடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top