இன்று (06) அதிகாலை 5 மணி அளவில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் கென்டேனர் மோதி விபத்து சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
நிட்டம்புவ, கஜூகம பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், 22 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறையில் இருந்து பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 22 பேர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.