இந்திய வம்சாவளியினர் மலையகத்தில் குடியமர்த்தப்பட்டு 200 வருடங்களை கடந்துள்ள நிலையில் நாம் 200 தேசிய நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வானது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
அத்தோடு இந்த நிகழ்வில் பிரதமர் தினேஸ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும், ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் பல உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மலையக மக்களுக்காக 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த சந்தர்ப்பத்தில் இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.
இதனை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையினை எட்டுவதற்கும் பல ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது.
மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நட்புறவின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அவர் குறிகப்பிட்டுள்ளார்.
வீட்டுத்திட்டம் மாத்திரம் அல்லாமல், மலையக மக்களின் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் தமது ஒத்துழைப்புகளை வழங்கும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.