மகளை சித்திரவதை செய்த தந்தைக்கு 2 வருட சிறைத்தண்டனை!

keerthi
1 minute read
0






யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


ஊர்காவற்துறை கரம்பொன் பகுதியை சேர்ந்த வாய் பேசாத முடியாத பெண்ணை சுருவிலை சேர்ந்த நபர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். 


அத்தோடு அவர்களுக்கு 04 வயதில் மகள் இருந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளார். 


அந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முற்பகுதியில் மனைவி விட்டு சென்ற நிலையில் தன்னுடன் இருந்த மகளை மிக மோசமாக சித்திரவதை புரிந்து , அடித்து துன்புறுத்தி அதனை காணொளியாக சமூக வலைத்தளங்களில் சிறுமியின் தந்தை பகிர்ந்து உள்ளார். 


ஊர்காவற்துறை நீதவானின் கவனத்திற்கு காணொளி சென்றதை  அடுத்து , ஊர்காவற்துறை பொலிஸாரை அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சிறுமியை தாக்கிய நபரை கைது செய்ய நீதவான் உத்தரவிட்டு இருந்தார். 


எனினும் அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமியை தாக்கிய நபரை கைது செய்ததுடன் , சிறுமியையும் மீட்டு இருந்தனர். 


மீட்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கு பின்னர் , சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஊடாக சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டதுடன் , சிறுமியின் தந்தை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்ட நிலையில் , சிறுமியை தாக்கிய தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று அவருக்கு இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது. 


இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவர் காப்பக பராமரிப்பில் வளர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top