நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இத்தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சிக்கு செல்லும் எனவும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ் மருத்துவர்கள் தேவைப்பாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே கோரியுள்ளார்.