யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று புதன்கிழமை காலை பயணிகளுடன் பயணித்த பேருந்தே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என அறியமுடிகிறது.
அத்தோடு கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து தரம்புரண்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.